காரைக்காலில் மூலவர் ராஜகணபதி மீது விழுந்த சூரிய ஒளி; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2025 01:03
புதுச்சேரி; காரைக்காலில் பழமை வாய்ந்த ராஜகணபதி கோவிலில் ராஜகணபதி மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
புதுச்சேரி, காரைக்கால் கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீராஜகணபதி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் மாலை நேரத்தில் சூரியன் ஒளி இறைவன் மீது நேரடியாக விழும். சூரிய பகவான் பூஜித்த பார்வதீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் அருகில் அமைந்துள்ள ராஜகணபதி கோவிலில் சூரியபகவான் ராஜகணபதியை சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதாக கருதப்படும் இந்நிகழ்ச்சி சூரிய பூஜை விழாவாக ஒரு வாரம் கொண்டாடப்படுவது வழக்கம். சூரிய பூஜை விழா இன்று துவங்கியது. விழாவின் முதல் நாள் மாலை 6 மணியளவில் சூரியனின் ஒளி மூலவர் ராஜகணபதி மீது விழுந்த போது விநாயகருக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து பல வண்ண மலர்கள் மற்றும் அருகம் புல்லால் அலங்காரம் செய்விக்கப்பட்டது. தெடர்ந்து ராஜகணபதி மீது சூரிய ஒளி நேரடியாக விழும் காட்சியின் போது மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.