பதிவு செய்த நாள்
20
மார்
2025
03:03
புவனகிரி; புவனகிரியில், ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமிக்கு மண்டகப்படி உற்சவம் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிள்ளை தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். புவனகிரி வந்த சுவாமிக்கு பாலக்கரையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, சவுரஷ்டிரா வீதியில் உள்ள கண்ணன் மடத்தில் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. இரவு 10.00 மணிக்கு அங்குள்ள பெருமாள் கோவிலில் எழுந்தருளினார். புவனகிரியில் நான்காவது நாள் மண்டகப்படி நிகழ்ச்சியை வர்த்தக சங்கத்தினர் இணைந்து நடத்தினர். இன்று காலையில் துவங்கி பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை வர்த்தக சங்க கவுரவ தலைவர் கலியபெருமாள், தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் ரத்தினசுப்பிரமணியன், பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். கே.பி., பட்டு மகால் உரிமையாளர் ஜெகன்பாலமுருகன், அபிராமி பட்டு மகால் உரிமையாளர் பன்னீர்செல்வம்,சிதம்பரம் விஜய் கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் விஜய்பிரபு, ஆரிய வைசிய சங்கத் தலைவர் சுந்தரேசன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினர் அன்னதானம் வழங்கினர்.