பதிவு செய்த நாள்
21
மார்
2025
11:03
கோவை; நஞ்சப்பா ரோடு, முனியப்ப சுவாமி கோவில் திருவிழா கடந்த 11ம் தேதி அன்று கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. இதையடுத்து விநாயகர் பூஜை ,வேள்வி பூஜை, அபிஷேகம் ஆகியன நடைபெற்றது. நான்காம் நாள் நிகழ்வாக 14ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலையில் 108 கலச பூஜை, விநாயகர் பூஜை, வேள்வி பூஜை, 108 கலச ஸ்தாபன பூஜை, 108 கலசாபிஷேகம் ஆகியன நடந்தது. இதை தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. நிறைவாக பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. 18ம் தேதி செவ்வாய் அன்று கரக உற்சவம். சுவாமி அழைத்தல், குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா ஆகியன நடைபெற்றது.தொடர்ந்து புதன்கிழமையான 19ம் தேதி சக்தி கரகம், மாவிளக்கு பூஜை ஆகியன நடைபெற்றன. நேற்று 20ம் தேதி மஞ்சள் நீராடல் கருப்பராய சுவாமி பூஜை. தீபாரதனை ஆகியன நடைபெற்றன. நிறைவு நாளான இன்று காலை விநாயகர் பூஜை, வேள்வி பூஜை, சங்கு ஸ்தாபன பூஜை ஆகியன நடைப்பெற்றது. அதை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாதனை ஆகியன நடைபெற்றது. நிறைவாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.