சந்தன மாரியம்மன் கோயில் 62வது பங்குனி விழா; அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2025 05:03
பரமக்குடி; பரமக்குடி சந்தன மாரியம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோயிலில் 62வது பங்குனி பொங்கல் விழா நடக்கிறது. கோயிலில் நேற்று டிச.,21 மாலை 6:00 மணி தொடங்கி பூத்தட்டுகளை ஏந்தி பக்தர்கள் நகர்வலம் வந்தனர். பின்னர் கோயிலில் இரவு 8:30 மணிக்கு பல்வேறு வண்ண மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. டிச.,25 இரவு 9:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் பொங்கல் விழா துவங்குகிறது. தினமும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்க உள்ளது. ஏப்.,1 காலை 11:00 மணிக்கு அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், இரவு 9:00 மணிக்கு பொங்கல் வைபவம் மற்றும் 11:00 மணிக்கு மேல் அம்மன் கரகம் எடுத்து நகர் வலம் வர உள்ளனர். ஏப்.,4 காலை பால்குடம், இரவு புஷ்ப அலங்காரத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை பரமக்குடி சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்துள்ளனர்.