திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2025 11:03
சென்னை; ‘‘திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம், ஜூலை 14ம் தேதி நடத்தப்படும்,’’ என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பூமிநாதன், ராஜன் செல்லப்பா ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மற்றும் திருக்கழுக்குன்றம் கோவில்களுக்கு, 26 கோடி ரூபாய் செலவில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சர்வே பணிகள் முடிந்துள்ளன. இப்பணிகளுக்கு 36 கோடி ரூபாய் தேவைப்படும் என, அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இவ்விபரம் முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கூடுதல் நிதியை விடுவிப்பதாக, முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளார். விரைந்து நிதி பெறப்பட்டு நடப்பாண்டு இறுதிக்குள் பணிகள் துவக்கப்படும். கோவிலில் 2.50 கோடி ரூபாயில், 16 மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. ஜூலை 14ம் தேதி கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.