திருப்பரங்குன்றம் கோயில் மண்டபங்களில் தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2025 04:03
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகளின் ஒரு பகுதியாக கோயிலுக்குள் மண்டபங்களில் சுத்தம் செய்யும் (வாட்டர் வாஷ்) பணி துவங்கியது.
கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்கும் வகையில் பிப். 10ல் பாலாலயம் நடந்தது. அதனை அடுத்து பங்குனி திருவிழா துவங்கியதால் கும்பாபிஷேக பணிகளில் துவங்குவதில்லை தாமதம் ஏற்பட்டது. பங்குனி திருவிழா முடிந்தவுடன் கோயில் ராஜ கோபுரத்தில் மூங்கில் சாரங்கள் அமைக்கும் பணி துவங்கியது. நேற்று சட்டசபையில் திருப்பரங்குன்றம் கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். பணிகளை திருத்தப்படுத்தும் வகையில் கோயிலுக்குள் உள்ள மண்டபங்கள், தூண்களை தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று துவங்கியது.