பதிவு செய்த நாள்
25
மார்
2025
04:03
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அருகே 800 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது நேரடியாக சூரிய ஒளி படும் நிகழ்வு நடந்தது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுாரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்கள், குரு பகவான், விநாயகர், முருகன், துர்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளது.இங்கு, பிரதோஷ பூஜை, பவுர்ணமி, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மற்றும் சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.மாவட்டத்திலேயே மேற்கு நோக்கிய சிவன் கோவில் என்ற பெருமை உடைய இக்கோவில் பங்குனி மாதத்தில் மார்ச் 24, 25 நாட்களில் மாலை 4:00 மணியிலிருந்து கருவரை சிவ லிங்கத்தின் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடந்து. தொடர்ந்து, நாளை 26ம் தேதியும் இந்நிகழ்வு நடக்கிறது.