உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று எண்ணப்பட்டது. உடுமலை நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் இக்கோவிலில் உண்டியல் குறிப்பிட்ட இடைவெளியில், அதிகாரிகள் முன்னிலையில், எண்ணப்படுகிறது. நேற்று நடந்த எண்ணிக்கையில், 4 லட்சத்து ஆயிரத்து 48 ரூபாய் காணிக்கை உண்டியலில் இருந்து எண்ணப்பட்டது. இதே போல், உடுமலை காளியம்மன் கோவில் உண்டியலில், பக்தர்கள் 24 ஆயிரத்து 954 ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் தீபா, பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.