சிவ என்றால் பரம மங்களம் என்று பொருள். ஒரு மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களைச் செய்திருந்தாலும் சரி...மனம் திருந்தி சிவசிவ என்று சொன்னால் போதும். அந்த பாவங்கள் பொசுங்கிப் போகும். நம் பாவங்களைத் தொலைக்க காசிக்கு போக வேண்டும், கங்கையில் மூழ்க வேண்டும், நம்மூர் சிவன்கோயிலுக்கு போய் பத்தாயிரம் ரூபாய் செலவில், அபிஷேகம் செய்ய வேண்டும், புத்தம்புது மலர் மாலைகளை அணிவிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சிவசிவ, நமசிவாய, சிவாயநம என்ற நாமங்களை உச்சரித்தாலே போதும்...பாவங்கள் கரைந்து விடும். தேவையற்ற விஷயங்களைப் பேசும் நாக்கை அடக்கி சிவசிவ என்று சொல்லுங்கள். வேண்டிய பலனை அடையலாம். இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவ சிவ என்றாலே நல்லது நடக்கும்!