கோவை காளியம்மன் கோவில் உற்சவ விழா; திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2025 11:03
கோவை; சாய்பாபா காலனி வீதி எண் 9 அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் 64ம் ஆண்டு உற்சவ விழா கடந்த 25ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. அதை அடுத்து அக்னி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதில் மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2.ம் தேதி சக்தி கரகம் நிகழ்வு அதை எடுத்து மதியம் 12 மணியளவில் மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.ஏப்ரல் 5.ம்தேதி காலை 10 மணியளவில் கருப்பராய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 4-ம் தேதி மூலவர் காளியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.