ஈரோடு: ஈரோடு ஹஸ்ரத் ஷேக் அலாவுதீன் பாதுஷா அவுலியா தர்கா கமிட்டி மற்றும் ஹஸ்ரத் ஷேக் அலாவுதீன் பாதுஷா பொது சேவை மையம் சார்பில் சந்தன உரூஸ் மற்றும் கந்தூரி விழா நடந்தது.சந்தனக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் சந்தனக்குடம் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தர்கா முத்தவல்லி கே.சாதிக்பாட்ஷா தலைமை வகித்தார்.டவுன் ஹாஜி வீட்டில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், மரப்பாலம், பன்னீர்செல்வம் பார்க், மார்க்கெட் வழியாக காவிரிக்கரை தர்காவை வந்தடைந்தது.