ஆங்காரகாளி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2025 02:03
நெல்லிக்குப்பம்; திடீர்குப்பம் ஆங்காரகாளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது. நெல்லிக்குப்பம், திடீர்குப்பத்தில் உள்ள ஆங்காரகாளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு கடந்த 25ம் தேதி சாகை வார்த்தல், 26ம் தேதி குறி சொல்லுதல் நடந்தது. 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம், அம்மன் வீதியுலா நடந்தது. 28ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளச் செய்து, தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மஞ்சள் நீராட்டு, கும்பம் படையல் நடந்தது.