ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் யுகாதி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2025 07:03
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு யுகாதி திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை வெள்ளிக்குறடு மண்டபத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். இரவு 6:30 மணிக்கு மேல் யுகாதி விழா சிறப்பு பூஜைகளை ஸ்ரீவாரி பிரபு பட்டர் செய்தார். பின்னர் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் தீர்த்தம், சடாரி ஆசிர்வாதம், கோஷ்டி நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.