பதிவு செய்த நாள்
31
மார்
2025
10:03
மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி விழா நேற்று நடைபெற்றது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதி பண்டிகை விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கல இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கும், பங்காரு அடிகளாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, யுகாதி பண்டிகையையொட்டி, செவ்வாடை பக்தர்களுக்கு வெல்லம், வேப்பம் பூ, ஆகியவற்றால் செய்த யுகாதி பச்சடி வழங்கப்பட்டது. மேலும், அருள் கூடத்தில் உள்ள அடிகளாரின் பாதுகைக்கு பாத பூஜை செய்தனர். அதன் பின் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநில நன்மைக்காவும், உலக நன்மைக்கவும் அடிகளார் தங்கத்தேர் பவனி, சித்தர் பீடத்தில் நடந்தது. இதில், ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநில நிர்வாகிகள், செவ்வாடை பக்தர்கள் செய்திருந்தனர்.