மேலூர் தெப்பக்குளம் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2025 11:04
மேலூர்; மேலூர் மண்கட்டி தெப்பக்குளம் காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று பொங்கல் வைக்கப்பட்டு அம்மனுக்கு படையலிடப்பட்டது. அதற்கு முன்பாக பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பிறகு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.