கோவை; ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவிலில் நடந்த, ராதா கல்யாண மஹோத்ஸவத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, காமாக்ஷி அம்மன் கோவிலில், இன்று ராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. மோகனா–கிருஷ்ணன், ஜானகி–ராமச்சந்திரன், விட்டல் சத்ய நாராயணன் பாகவதர் மற்றும் ஏக்நாத் பஜனை குழுவினர் சார்பில் நடந்த, ராதா–கிருஷ்ணர் திருக்கல்யாண மஹோத்ஸவத்தில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவை மக்கள் நலம் பெற, நவராத்திரியில் இத்திருக்கல்யாணம் நடத்தினால் பலன் அதிகமாக இருக்கும் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜானகி தெரிவித்தார். நிறைவில், அன்னதானம் வழங்கப்பட்டது.