பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா; ஏப். 5ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2025 12:04
பழநி; பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப். 5 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் ஏப். 5 காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப். 10 ல் திருக்கல்யாணம், அன்று மாலை வெள்ளி தேரோட்டம் நடக்கிறது. ஏப். 11 மாலை 4:30 மணிக்கு தேரோட்டம், ஏப்.,14 அன்று இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.