Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ஒரே ... ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆதி பிரம்மோத்ஸவம்; அங்குரார்ப்பத்துடன் துவங்கியது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவி கருமாரியம்மன், மைதானம் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவி கருமாரியம்மன், மைதானம் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா

பதிவு செய்த நாள்

02 ஏப்
2025
10:04

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் தேவி கருமாரியம்மன் கோவிலிலும், மைதானம் மாரியம்மன் கோவிலிலும், கம்பம் நடும் விழாவும், குண்டத்து காளியாதேவி கோவிலில், ஆடு குண்டம் திறப்பு திருவிழாவும் நடந்தன.


மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர், தேவி கருமாரியம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. தேவி கருமாரியம்மன் கோவிலில், கம்பம் நடும் விழா நேற்று நடந்தது. காலையில் கணபதி ஹோமம், இரவு பூச்சாட்டு மற்றும் அக்னி கம்பம் நடும் விழா நடந்தது. எட்டாம் தேதி அம்மன் அழைப்பும், ஒன்பதாம் தேதி மாவிளக்கு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 11ம் தேதி சக்தி விநாயகர் பூஜையும், 13ம் தேதி நடூர் மாரியம்மன் கோவில் இருந்து திரிசூலம் எடுத்து வருதலும், இரவு சிவபெருமான் அழைப்பும் நடைபெற உள்ளது. 15ம் தேதி வெள்ளியங்கிரி மலைக்கு புறப்படுதலும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


மேட்டுப்பாளையம், ஊட்டி சாலையில் உள்ள காந்தி மைதானத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மிகவும் பழமையான, மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா, கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று இரவு, கம்பம் நடும் விழா நடந்தது. மூன்றாம் தேதி கொடியேற்றமும், நாலாம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. ஏழாம் தேதி இரவு குண்டம் திறப்பும் நடைபெற உள்ளது. எட்டாம் தேதி காலை, 8:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமி அழைப்பும், 8:30 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. ஒன்பதாம் தேதி மாலை, 4:30 மணிக்கு அம்மன் சுவாமி தேரோட்டம் நடைபெற உள்ளது. 14ம் தேதி மறு பூஜையும், அன்னதானமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி செய்து வருகிறார்.


மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலின், 37ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மாதம், 25ம் தேதி இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று இரவு ஆடு குண்டம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 8ம் தேதி ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னி சட்டியும் அழைத்து வரப்பட உள்ளது. இரவு குண்டம் திறப்பும், ஒன்பதாம் தேதி காலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், அதைத் தொடர்ந்து குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. பின்பு அம்மனுக்கும், முனீஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் நடைபெற உள்ளது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மாவிளக்கு பூஜையும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. 11ம் தேதி மகா அபிஷேக மறு பூஜை நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar