Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரும்பை பாலா திரிபுரசுந்தரி ... உத்தரகோசமங்கை கோயிலில் வெயிலால் பக்தர்கள் தவிப்பு தரை விரிப்பு தேவை உத்தரகோசமங்கை கோயிலில் வெயிலால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ஆதிப்ரஹ்மோத்ஸவம் (பங்குனித் திருநாள்) கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ஆதிப்ரஹ்மோத்ஸவம் (பங்குனித் திருநாள்) கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

03 ஏப்
2025
10:04

திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று கொடியேற்றத்துடன் (துவஜாரோஹாணம்) துவங்கியது.


வைணவ திவ்யதேசங்கள் 108ல் முதன்மையானதும், ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பூலோக வைகுண்டமுமான திருவரங்கம் திருக்கோயில் ஆதிபிரம்மோத்ஸவத்தில் நேற்று அங்குரார்ப்பத்தம் நடைபெற்றது. விபீஷணாழ்வார் ஸ்ரீரங்க விமானத்தை அயோத்தியிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லுகையில் சந்திரபுஷ்கரணி கரையில் இறக்கி வைத்தார். உறையூரில் அப்பொழுது அரசனாயிருந்த தர்மவர்மா மறுநாள் பிரம்மா ஏற்படுத்திய உத்ஸவம் நடத்த வேண்டிய தினமாக இருந்ததால், தர்மவர்மா கோரிக்கையை ஏற்று விபீஷணாழ்வார் இந்த பிரம்மோத்ஸவத்தை நடத்த அனுமதித்தார் என ஸ்ரீரங்க மஹாத்மியத்திலும், லக்ஷ்மி காவியத்திலும் காணப்படுகிறது. 


இன்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை 3.15 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு துவஜாரோஹண மண்டபம் சேர்ந்தார். அதிகாலை 3.45 மணி கொடிப்படம் புறப்படுதல் நடைபெற்று, அதிகாலை 4.15 மணி துவஜாரோஹணம் (கொடியேற்றம்) மின லக்னத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் வாகனமண்டபத்திலிருந்து புறப்பாட்டு கண்ணாடி அறை சேர்ந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பதினொன்று நாட்கள் இந்த உத்ஸவம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. பங்குனி தேர் (கோரதம்) 12ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நாளை முதல் 12ம் தேதி வரை விஸ்வரூப சேவை கிடையாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar