பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
11:04
அயோத்தி; அயோத்தி ராம் ஜென்மபூமி மந்திர் வளாகத்தில், ராமர் கோவில் தவிர, சூர்யா, கணேஷ், சிவன், துர்கா, அன்னபூர்ணா, ஹனுமான் போன்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களும், மகரிஷி வால்மீகி கோவில் என பல கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது சைத்ர நவராத்திரி விழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழானை முன்னிட்டு நேற்று, ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் 7 புதிய மந்திர்களின் கூட்டு வழிபாடு மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பூஜ்ய கமல் நயன் தாஸ் மகராஜ், பூஜ்ய கௌரங் தாஸ் மகராஜ், பிற அறங்காவலர்கள், லார்சன் & டூப்ரோவின் பிரதிநிதிகள், டாடா கன்சல்டிங் பொறியாளர்கள், அறக்கட்டளையின் சார்பாக பணியாற்றும் பொறியாளர்கள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.