பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
12:04
கோவை; சிங்கேரி சாரதா பீடம் பேரூர் கிளை சார்பில் ஸ்ரீ சித்தி புத்தி சமேத பஞ்சமுக பிரசன்ன ராஜகணபதி கோவிலில் ராஜகணபதிக்கு தங்கம் மற்றும் வெள்ளி கவசம் சாற்றும் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தா பிரதிஷ்டை ஆகியன நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக நேற்று வியாழக்கிழமை அன்று காலை 5:30 மணிக்கு குரு வந்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாஹம், ரக்ஷா பந்தனம்,வாஸ்து சாந்தி கலச ஸ்தாபனம் ஆகியன நடைபெற்றது. காலை 8 மணி அளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது
அதை தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு தங்கக் கவசம் மற்றும் வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வேத பாராயணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து முதல் கால பூஜை பூர்ணாகதி ஆகிய நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று காலை 5:30 மணி அளவில் கோபூஜை,குரு வந்தனம்,சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சான்றுதல், அதை தொடர்ந்து இரண்டாம் கால பூஜை,நாடி சந்தானம், பூர்ணாஹதி நடைபெற்றது. காலை 9 மணி அளவில் யாத்திரா தானம், தர்மசாஸ்தா சிலை பிரதிஷ்டை ஆகியன நடைபெற்றது. இதில் சிறப்பு வெள்ளி காப்பு கவச அலங்காரத்தில் விநாயகப் பெருமானும், தங்கக்காப்பு கவசத்தில் தர்ம சாஸ்தாவும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதை தொடர்ந்து மகா தீபாரதனை பொதுமக்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் மற்றும் தர்மசாஸ்தாவின் அருளைப் பெற்றனர்.