ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2025 01:04
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 9:15 மணிக்கு மேல் கொடிப்பட்டம் மாடவீதிகள், ரத வீதிகள் சுற்றி வந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கொடி மரத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 11:00 மணிக்கு பிரபு பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். திரளான பக்தர்கள் பங்கேற்று ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசித்தனர். விழா நாட்களில் காலை 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு 7:00 மணிக்கு வீதி உலாவும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா ஏப்.11ல் நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு செப்பு தேரோட்டமும், மாலை 5:30 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.