பதிவு செய்த நாள்
05
ஏப்
2025
11:04
தென்காசி; மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலநாதர் கோயிலில் சித்திரை விசு திருவிழா துவங்கியது.
குற்றாலநாதர் கோயிலில் நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் என பஞ்சபூத லிங்கங்களையும் இங்கு ஒன்றாக தரிசிக்கலாம். பஞ்ச சபைகளான பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்ற 5 சபைகளில் குற்றால நாதர் கோயில் அருகே சித்ர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக அருளுகிறார். இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் சித்திரை விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 12ம் தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், 14ம் தேதி விசு தீர்த்தவாரியும் நடக்க உள்ளது.