Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளிமலை முருகன் கோவிலில் மஹா ... ராமாயணம் காட்டும் சகோதரத்துவம் மகத்தானது... ராம நவமி விழாவில் நெகிழ்ச்சி... ராமாயணம் காட்டும் சகோதரத்துவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமபிரானை வணங்கினால் யோகமும் போகமும் பெறலாம்
எழுத்தின் அளவு:
ராமபிரானை வணங்கினால்  யோகமும் போகமும் பெறலாம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2025
11:04

மதுரை; ராமபிரானை வணங்கினால் யோகமும் போகமும் பெறலாம்’’ என ஆன்மிகப் பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன் பேசினார்.


ராம நவமியை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம்.கே., மண்டபத்தில் முகுந்தனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. நேற்று அவர்யோகமும் போகமும் என்ற தலைப்பில் பேசியதாவது; ராமாயணம் என்றால் அது ராமபிரானின் வரலாறு என்பதாக நினைக்கிறோம். அதற்கு ராமோ தண்டம் என்று வைத்திருக்கலாம். உதண்டம் என்றால் வரலாறு என்று பொருள். அயனம் என்றால் வழி என்று பொருள். சூரியன் தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை செல்லும் பாதை உத்தராயனம். ஆடி முதல் மார்கழி வரை செல்லும் பாதை தட்சணாயனம். உத்திர என்றால் வடக்கு, தட்சணம் என்றால் தெற்கு. அதுவே உத்தராயனம், தட்சணாயனம் ஆகும். அதுபோல ராமாயணம் என்றால் ராமபிரானின் வழி. வாழ்வாங்கு வாழும் மனிதர்கள் தெய்வ நிலையை அடைய ராமபிரான் வழியில் அதாவது ராம அயன’த்தில் நடந்தால் உயர்ந்த நிலையை அடையலாம். அதற்காக வாழ்ந்து காட்டியதுதான் ராமபிரானின் வழி. ஒரு சொல்; ஒரு இல்; ஒரு வில்; இது ராமனின் வழி. ராமபிரான் உலகில் உள்ள அனைவரையும் சகோதரராக நேசித்தார். உண்மையான சமூக நீதியை நிலைநாட்டினர். அந்தக் காலத்தில் தீண்ட தகாதவன் என்று ஒதுக்கி தள்ளப்பட்ட குகப்பெருமானை, குரங்கு இனத்தைச் சேர்ந்த சுக்ரீவனை, தன் மனைவியை கவர்ந்து சென்ற ராவணனின் தம்பி விபீஷணனை சகோதரனாக ஏற்றுக் கொண்டார். .


‘இன்று பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று ஒரு சிலர் பேசுகிறார்களே, அதனை நடத்திக் காட்டியவர் ராமபிரான். ஒரு பறவை ஜடாயு அதை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து ஈமக்கிரியை செய்தான். இப்படிப்பட்ட ராமபிரானையும், சீதையையும் வணங்கினால் வாழ்க்கையில் யோகமும் போகமும் பெறலாம். யோகம் என்றால் அதிர்ஷ்டம். போகம் என்றால் அதை அனுபவிக்கும் வாய்ப்பு. வாழ்க்கையில் பலருக்கு அதிர்ஷ்டம் இருக்கும். அதை அனுபவிக்க முடியாது. ஒரு சிலர் அதிர்ஷ்டம் இல்லாமலேயே அனுபவித்துக் கொண்டிருப்பர். ஆனால் ராமபிரானும், சீதாப்பிராட்டியும் அதிர்ஷ்டத்தையும், அதை அனுபவிக்கும் வாய்ப்பையும் கொண்டனர். இவ்வாறு அவர் பேசினார். இன்று (ஏப்.5) மாலை 6:30 மணிக்கு ‘திருவடி சூடிய திருமுடி’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: ராம நவமியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்,; ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையம் அருகில் ஸ்ரீ சீரடி சாயி பிருந்தாவனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மொழையூர் கிராமத்தில் ஶ்ரீராம நவமியை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் சிதா ... மேலும்
 
temple news
பரமக்குடி, பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் ராமநவமி விழாவில் கருட வாகனத்தில் ராமர் வலம் ... மேலும்
 
temple news
கோவை ; ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் கடந்த 28-03-2025 முதல் ராம நவமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar