திருத்தங்கல் மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் கயர் குத்து திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2025 04:04
சிவகாசி; சிவகாசி திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகாசி திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் சிம்ம, வெள்ளி ரிஷப, கைலாச பருவத , வேதாள, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று நடந்த கயர் குத்து திருவிழாவில் பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் வேப்பிலையில் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு பட்டாசு ஆலைகள், கல்லுாரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆங்காங்கே பலர் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கினர்.