பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
11:04
விழுப்புரம்; தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு 19ம் ஆண்டு பாலாபிஷேகம் உற்சவம் நடக்கவுள்ளதை யொட்டி சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.
விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் 90 அடியில் ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி சிலை உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு ஏப்., 14ம் தேதி பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் கொண்டு வரும் பால் மூலம் சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். இந்தாண்டு 90 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 19ம் ஆண்டு, 5 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேக உற்சவம் வரும் 14ம் தேதி காலை 10.00 மணிக்கு நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 2 ஆயிரம் பேருக்கு அன்னனதானம் வழங்கப்படவுள்ளது. உற்சவத்தை முன்னிட்டு, நேற்று சிலை நிறுவனர் தனுசு தலைமையிலான நிர்வாகிகள், ஆஞ்சநேயர் சுவாமி சிலையை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதில், நிர்வாகிகள் ராஜாமணி, ஜெயராமன், மணிகண்டன், பத்மநாபன், சிவக்குமார், கலைசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.