ஏழு குழந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழா; சுவாமி வேடமணிந்து பக்தர்கள் வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2025 11:04
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் ஏழு குழந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செலுத்தினர். ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் உள்ள ஏழு குழந்தையம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 01 ந்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் பக்தர்கள் செங்குந்தர் தெருவில் உள்ள வினாயகர் கோவிலில் இருந்து சுவாமி மற்றும் அம்மன் வேடங்கள், புலியாட்டம், குறவன், குறத்தி, காளி, மாரி,எமதர்மன், போலீஸ்உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக புறப்பட்டு கடை வீதி வழியாக வலம் வந்தனர். மேலும் பக்தர்கள் சாகான் வேடமணிந்து அம்மன் விருத்தப்பாடல்கள் பாடினர். நேற்று தலைத்தேர் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை செங்குந்தர் தெரு முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.