பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
04:04
வடபழனி; சென்னை, வடபழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான விழா லட்சார்ச்சனையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 14ம் தேதி வரை லட்சார்ச்சனை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
வடபழனி ஆண்டவர் கோவிலில் நேற்று 10ம் தேதி வரை, மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்றது. பங்குனி உத்திர நாளான இன்று 11ம் தேதி, உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கலாசாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் ஏந்தி, அழகு குத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை 12 முதல் 14ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது.