திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கண்ணாடி பல்லக்கில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 04:04
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழாவின் 8ம் நாளான நேற்று இரவு சுவாமி கண்ணாடி பல்லக்கில் வீதி உலா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 4ம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சுவாமி திருக்கல்யா வைபவம் நடந்தது. காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் தங்க பல்லக்கில் வீதி உலா நடந்தது. 11:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு வசந்த மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சென்னை, தொழிலதிபர் சண்முகம் அவர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட நூதன கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் கல்யாண அலங்காரத்தில் எழுந்தருள, பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, வாணவேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கிருஷ்ணன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.