பங்குனி உத்திர விழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 06:04
ராமேஸ்வரம்; பங்குனி உத்திர விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இன்று பங்குனி உத்திர விழா யொட்டி ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் உள்ள பக்தர்கள் காவடி எடுத்து முருகன் கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் ராமேஸ்வரத்தில் புதுரோடு, கரையூர், எம்.ஆர்.டி., நகர், சம்பை, மாங்காடு பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் பறக்கும் காவடி, தேர் காவடி, வேல் காவடி எடுத்து வந்து ராமேஸ்வரம் கோயிலில் உள்ள மேலவாசல் முருகன் சன்னதிக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். என்னைத் தொடர்ந்து மாலையில் முருகன் சன்னதியில் நடந்த சிறப்பு அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மதியம் ராமேஸ்வரம் கோயில் சன்னதி அருகில் 1008 சங்குகள் வைத்து சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.