பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்.. எதிர்காலத்தின் நிலையறிந்து செயல்படும் உங்களுக்கு சித்திரை மாதம் விருப்பம் நிறைவேறும் மாதமாகும். மே 11 வரை குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிலையை உயர்த்துவார். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை நீக்குவார். வரவை அதிகரிப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகளை நீக்குவார். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு யோகத்தை வழங்குவார். திருமண வயதினரின் கனவை நனவாக்குவார். இந்த மாதம் உங்கள் வாழ்க்கைக்குரிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடந்தேறும். என்றாலும், ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேலைகளில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏப்.30 முதல் புதன் யோகத்தை வழங்குவார். சொத்து சேர்க்கையை உண்டாக்குவார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். திட்டமிட்டு செயல்பட வைப்பார். வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார்.
சந்திராஷ்டமம்: ஏப்.22
அதிர்ஷ்ட நாள்: ஏப்.20, 21, 29, 30, மே 2, 3, 11, 12
பரிகாரம்: சனிபகவானை வழிபட சங்கடம் தீரும்.
பூசம் : நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, சித்திரை மாதம் யோகமான மாதம். சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். துணிச்சலாக செயல்படும் நிலை உண்டாகும். சொத்து, வாகனச் சேர்க்கை ஏற்படும் என்றாலும் தொழிலில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றும். எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையவும் வாய்ப்பு இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். இந்த நேரத்தில் ஏப்.26 வரை 3ல் சஞ்சரிக்கும் கேது உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பார். தைரியத்தை அதிகரிப்பார். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் 9ல் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் வருமானம், சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் தொல்லை அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். ஏப்.30 க்குப் பிறகு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான மாதம். உயர்கல்வி கனவு நனவாகும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஏப்.23
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,20,26,29, மே2,8,11
பரிகாரம்: பழநி முருகனை வழிபட கவலை தீரும்.
ஆயில்யம்: சூழல் அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை யோகமான மாதமாகும். 10ல் உச்சமாக சஞ்சரிக்கும் சூரியன் நன்மை வழங்கிட இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அவற்றை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் இருந்த எதிர்ப்பு, போட்டி இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் கை ஓங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். ஏப்.30 முதல் புதனும் 10ல் சஞ்சரிப்பதால் சொத்து சேர்க்கை இருக்கும். வங்கியில் கேட்டிருந்த கடன் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். லாப குருவால் வாழ்க்கை வளமாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தைரியமாக செயல்படக்கூடிய சூழல் அமையும். குழந்தை பாக்கியம், திருமணம் என்ற கனவுகள் நனவாகும் என்றாலும், 8ல் சனி பகவான் சஞ்சரிக்கும் நிலையில் ஏப். 16 முதல் ராகுவும் அங்கு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. வாகனத்தை இயக்கும் போது வேறு சிந்தனை வேண்டாம். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். எந்த நோய் வந்தாலும் உடனடியாக சிகிச்சை எடுப்பது நல்லது. மாணவர்களுக்கு தேர்வு முடிவு சாதகமாகும். தற்காலிகப் பணியாளர்கள் சிலருக்கு பணி நிரந்தரமாகும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும்.
சந்திராஷ்டமம்: ஏப்.24
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,20,23,29,மே2,5,11,14
பரிகாரம் மீனாட்சியம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.