குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2025 04:04
கோவை ; கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குருந்த மலை அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர வைபவம் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை கிராம சாந்தியுடன் துவங்கியது. ஒன்பதாம் தேதி புதன்கிழமை காலை கொடியேற்றம் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்ற பங்குனி உத்திரமான வெள்ளிக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது அதனை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜையுடன் திருத்தேர் பவனி நான்கு ரத வீதிகள் வழியாக வளம் வந்து நிலையை அடைந்தது. பங்குனி உத்திர விழா ஏற்பாட்டினை அறங்காவலர் குழு தலைவர் மோகனப்பிரியா கணேசன், அறங்காவலர்கள் குழந்தை வேலு சுரேஷ்குமார் சாவித்திரி முருகன் மற்றும் செயல் அலுவலர் வனிதா உள்ளிட்டோர். இந்த திருத்தேர் வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்டனர்.