விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2025 04:04
விக்கிரவாண்டி, ஏப்.15– ; விக்கிரவாண்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப திருவிழா நடந்தது.
விக்கிரவாண்டி டோல்கேட் அருகிலுள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு இன்று காலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனை நடந்தது. மாலை 4 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு செப்பு கவசம் அணிவிக்கப்பட்டு லட்ச தீப ஆராதனை, புஷ்பாஞ்சலி, அர்ச்சனை நடந்தது. விக்கிரவாண்டி சுற்றுப்புற கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் சுவாமி மாட வீதி வழியாக வீதி உலா வந்தது. விழா ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அயோத்தி ஆஞ்சநேயர் கோவிலில் காலை அஸ்வத்த குபேர விநாயகருக்கு சிறப்பு வழிபாடும், காலை 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், ஆஞ்சநேயரர், குபேர விநாயகர் சுவாமிகளுக்கு வடமாலை சாத்துதல் மற்றும் தீபாரதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.