சித்திரை கனி பூஜை அலகு மலையில் திரண்ட மக்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2025 04:04
பொங்கலூர்; பொங்கலூர் அலகு மலையில் உள்ள முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று சித்திரை கனி பூஜை நடந்தது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தனர். முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமிக்கு நான்கு டன் பழங்களால் கனி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
மலை அடிவாரத்தில் இருந்து தனிநபர் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அலகுமலை வித்யாலயா சார்பில் ஆறுபடை வீடு வரை மலை அடிவாரத்தில் இருந்து பஸ் இயக்கப்பட்டது. படிக்கட்டில் நடந்து வரும் பக்தர்களுக்கு ஆறுபடை வீடு வரை சணல் சாக்குகள் விரிக்கப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டு இருந்தது. ஆறுபடை வீட்டிலிருந்து மலை உச்சி வரை இரண்டு பக்கமும் சொட்டுநீர் பைப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் வெயிலின் தாக்கம் தெரியாமல் சென்று வந்தனர். அதிகாரி ஓட்ட ஒற்றை வீடியோக்கள் தர்பூசணி விற்பனை பாதித்தது. பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவும், விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் அப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து ஐந்து டன் தர்பூசணி பழங்களை இலவசமாக வழங்கினர். மேலும் நீர்மோர், கம்மங்கூழ், அன்னதானம் வழங்கப்பட்டது.