வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை; சிவபெருமான் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 10:04
மேட்டுப்பாளையம்; தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்னூர் சாலையில் நடுவர் மாரியம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக திருக்கோவில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பவானி ஆற்றங்கரை சென்று சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்து கரகம் தீர்த்த கரகம் எடுத்து வான வேடிக்கையுடன் தாரை தப்பட்டை முழங்க சிவபெருமான் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ விஷ்வா வசு தமிழ் வருடத்திய விசேஷ பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மனோன்மணி சமேத வெள்ளிங்கிரி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை வரை அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டினை ஸ்ரீ வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பில் தலைவர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.