கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 10:04
கோவை; கோவையின் குல தெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில் 2025-ம் ஆண்டு சித்திரை விழா தமிழ் புத்தாண்டான நேற்று 14ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் கோவில் வளாகம் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றும் நடைபெற்றது. முன்னதாக, கொடிமரம் முன்பு ஹோம குண்டம் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்தனர். கொடி மரத்திற்கு கட்டப்படும் கொடியை தலையில் சுமந்தபடி கோவில் வளாகத்தை சுற்றி வந்து பூஜைகள் செய்யப்பட்டது, தொடர்ந்து வேத மந்திரம் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தண்டு மாரியம்மனை வழிபட்டனர்.