பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
10:04
திருப்பூர்; அகில பாரத ஹிந்து மகாசபா திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், கடந்தாண்டு அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு, ஒன்றே முக்கால் கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட ராமர் பாதம் வழங்கப்பட்டது. இந்தாண்டு, ஸ்ரீராமருக்கு, 2 கிலோ வெள்ளி கிரீடம் வழங்க திட்டமிடப்பட்டது. தமிழ்புத்தாண்டு தினமான நேற்று, அனுப்பர்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீராமருக்கு கிரீடம் தயாரிக்க முதற்கட்டமாக அரை கிலோ வெள்ளி வழங்கப்பட்டது. மாநில இளைஞரணி தலைவர் வல்லபை பாலா, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், தயாரிப்பு நிறுவனத்தினரிடம் வெள்ளியை வழங்கினர். ‘ஏப்.26ல் திருப்பூருக்கு வரும் தேசிய தலைவர் சக்ரபாணி மகாராஜிடம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்திய பின், வெள்ளி கிரீடம் ஒப்படைக்கப்படும்; பின், அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு வழங்கப்படும்’ என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.