பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
11:04
மாமல்லபுரம்; திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் துவங்கியது. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவில், பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், திருமண தடை மற்றும் ராகு – கேது தோஷம் ஆகிய பரிகார கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம், ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். இந்த உத்சவம், நேற்று முன்தினம் காலை வேத மந்திரங்கள் முழங்க, கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வரும் 22ம் தேதி வரை நடைபெறும் உத்சவத்தில், தினசரி காலை திருமஞ்சனம், நண்பகல் மற்றும் இரவு உத்சவம் நடந்து, சுவாமி வீதியுலா செல்கிறார். முக்கிய உத்சவங்களாக, வரும் 17ம் தேதி இரவு கருட சேவை, 19ம் தேதி காலை, திருத்தேரில் சுவாமி உலா, 22ம் தேதி இரவு தெப்போத்சவம் ஆகியவை நடக்கின்றன.