பழநி பங்குனி உத்திர திருவிழா நிறைவு; திருஊடல் உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 11:04
பழநி; பழநி திரு ஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் திரு ஊடல் உற்ஸவம் நடைபெற்றது. பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, ஏப்.,5,ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஏப்.,10 ல் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும், அன்று இரவு வெள்ளி தேரோட்டமும், ஏப்.,11ல் தேரோட்டமும் கிரிவீதிகளில் நடைபெற்றது. நேற்று காலை 11:00 மணிக்கு திருஆவினன்குடி கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் கோயில் நடையை அடைத்தனர். அதன்பின் ஓதுவார் சிவ நாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். அதன் பின் கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றது.