செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் முத்து பல்லக்கு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2025 05:04
செஞ்சி; செஞ்சி செல்வ விநாயகர் கோவிலில் முத்து பல்லக்கு விழா நடைபெற்றது. செஞ்சி காந்தி பஜார் செல்வ விநாயகர் கோவிலில் கடந்த 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று லட்சதீபத் திருவிழா நடந்தது. இதன் தொடர்ச்சியாக நான்காம் நாள் விழா நேற்று நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். இரவு 10 மணிக்கு முத்து பல்லாக்கு விழா நடந்தது. செல்வ விநாயகர் கோவிலில் இருந்து செஞ்சி கூட்ரோடு வரை நடந்த முத்து பல்லக்கு விழாவின்போது வான வேடிக்கை, மேலகச்சேரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.