அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2025 10:04
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. கோயிலில் பங்குனி பொங்கல் விழா ஏப்.9 கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. அம்மன் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம் 8ம் நாள் விழாவாக பக்தர்கள் விரதமிருந்து அக்னி சட்டி எடுத்தனர். நேற்று அதிகாலை கோயிலுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். தினமும் ஒவ்வொரு மண்டகப்படியாரின் விழா நடக்கிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது.