திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2025 12:04
திருநெல்வேலி; திருநெல்வேலி ஜங்ஷன் கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பட்டு வஸ்திர அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் வீர ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். அவரது திருவடிகள் குபேர திசை நோக்கிக் காணப்படுகின்றன. இந்த அனுமனுக்கு வடை மாலை சாத்தி, அன்னதானம் செய்தால் வியாபாரம் செழிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இவர், கெட்வெல் ஆஞ்சநேயர் எனவும் அழைக்கப்படுகிறார். இவருக்கு இன்று சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு பட்டு வஸ்திர அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.