காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில்ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோத்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடக்கும் அதன்படி, நடப்பாண்டு பிரம்மோத்சவம் மே மாதம் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில், மூன்றாம் நாளான மே 13ம் தேதி காலை, கருடசேவை உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான மே 17ம் தேதி காலை, தேரோட்டமும், மே 19ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி உத்சவமும் நடக்கிறது. பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று, பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. காலை 5:30 மணிக்கு, காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் ஆஞ்சநேயர் கோவிலில் பந்தகால் முகூர்த்தம் நடந்தது. அதை தொடர்ந்து 6:00 மணிக்கு காந்தி சாலை, தேரடியில், திருத்தேர் பந்தகால் முகூர்த்தமும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கொடிமரம் அருகிலும் மற்றும் மேற்கு ராஜ கோபுரம் அருகில், 6:30 மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.