பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
01:04
திண்டிவனம்; திண்டிவனம் அருகே மொளசூரில் அமைந்துள்ள ஸ்ரீ அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப் – ஸ்ரீ மகா பெரியவா நகர் துவக்க விழா நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்–புதுச்சேரி ரோட்டில் உள்ளது மொளசூர் கிராமம். இங்குள்ள திண்டிவனம் ஆர்.டி.ஒ., அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது ஸ்ரீ அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப் – ஸ்ரீ மகாபெரியவா நகர். மொளசூர் புண்ணிய சேஷத்திர அக்ரஹாரத்தில், நேற்று காலை துவக்க விழா நடந்தது. இதையொட்டி ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 108 கலச பூஜை, மகா விஷ்ணு ஹோமம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு மகா சங்கல்பமும், தொடர்ந்து கோபூஜை, புண்ணியாகவாசனம், நாமசங்கீர்த்தனம், வேதபாராயணம், அக்னி பிரதிஷ்டை, மகா விஷ்ணு ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. துவக்க விழாவில், புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சக்தி குரூப்ஸ் எம்.டி.,பார்த்தீபன், ஸ்ரீஅக்ரஹாரம் குரூப்ஸ் எம்.டி., ஆலங்குடி எஸ்.வி.ஆர்.வி., கீர்த்திவாசன் ஐயர், சக்தி குரூப்ஸ் ஈஸ்வரன், ஆர்.ஐ.பி.இ.,கன்சல்ட்டிங் முதன்மை அதிகாரி டாக்டர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீஅக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப் – ஸ்ரீ மகாபெரியவா நகரில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி பூமிதேவி சமேத சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதில் பெருமாள் தாயாருக்கு வஸ்திரம் ஓதி கொடுத்தல், உபசாரங்கள் திருமாங்கல்ய பூஜை, திருமாங்கல்ய தாரணம் விசேஷ அர்ச்னை தீபாராதனை நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஸ்ரீ அக்ரஹாரம் குரூப்ஸ் எம்.டி., ஆலங்குடி எஸ்.வி.ஆர்.வி., கீர்த்திவாசன்ஐயர் தெரிவித்துள்ளார்.