பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
04:04
தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா இன்று(26ம் தேதி) வெகு சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், ராகு பகவான் நாகவல்லி,நாகக்கன்னி இரு துணைவியருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நவக்கிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்நிலையில் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ராகு பகவான் பெயர்ச்சியடைந்து வருகிறார். அதன்படி இந்தாண்டு இன்று (26ம் தேதி) மாலை 4 மணி 20 நிமிடத்திற்கு ராகுபகவான் மீனத்தில் இருந்து கும்ப ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜையும், வேள்வி நடைபெற்றது. பின்னர் பால்,மஞ்சள்,திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட மங்களப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.