மேட்டுப்பாளையம் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் மறு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2025 04:04
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, மகா சக்தி மாரியம்மன் கோவிலில் மறு பூஜை நடந்தது. இக்கோவிலில் கடந்த எட்டாம் தேதி, திருவிழா பூச்சாட்டு நடந்தது. 15ம்ரர தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. 20ம் தேதி ராஜபுரம் ஊர் பொதுமக்கள் கரகம், பூச்சட்டி எடுத்து வந்தனர். பஸ் ஸ்டாண்ட் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடங்கள் எடுத்து வந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின்பு சுவாமிக்கு அலங்காரமும், பூஜையும் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். அதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டும், மறுபூஜையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.