சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2025 03:04
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அமாவாசை வழிபாடு நேற்று சிறப்புடன் நடந்தது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் காலை 10:00 மணி வரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர். எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்து பக்தர்களை மலையேற அனுமதித்தனர். கோயிலில் மதியம் 12:00 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர்.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.