பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் சித்திரைத் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2025 04:05
பிரான்மலை; பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட இக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று தொடங்கியது. காலை 8:00 மணிக்கு கோயில் கொடிமரத்திற்கு உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. 9:30 மணிக்கு கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் பரிவார தேவதைகளுக்கு காப்புக்கட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு 10 நாள் மண்டகப்படியாக தினமும் வெவ்வேறு வாகங்களில் சுவாமி திருவீதி உலா வருவர். மே 5 ம் தேதி குயிலமுத நாயகி திருக்கொடுங்குன்றநாதருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மே 9 ல் தேரோட்டமும், மே 10 ல் தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனமும், ஐந்து ஊர் கிராமத்தினரும் செய்து வருகின்றனர்.