பதிவு செய்த நாள்
05
மே
2025
11:05
காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள புலிகுத்தியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், புரவி எடுப்பு விழா 32 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி அருகேயுள்ள புலிக்குத்தி கண்மாய் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரவி எடுப்பு விழா நடைபெறும். புலிக்குத்தி, கல்லுவயல், பொட்டவயல் ஆகிய 3 கிராமங்கள் சார்பில், மழை பெய்திடவும், விவசாயம் செழித்திடவும் நடைபெறும் இத்திருவிழா கடந்த 32 ஆண்டுகளாக நடைபெறவில்லை. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, 3 கிராமம் சார்பில் இத்திருவிழா நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் குதிரை செய்வதற்கு பிடிமண் வழங்கப்பட்டது. சூளைப் பொட்டலில் குதிரை செய்யும் பணி நடந்தது. 6 காளை, 1யானை, 31 குதிரை என மொத்தம் 38 புரவிகள் தயாரானது. தொடர்ந்து சூளைப் பொட்டலில் இருந்து கூத்து பொட்டலுக்கு குதிரைகள் கொண்டு செல்லப்பட்ட. அங்கு சமபந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலுக்கு புரவிகள் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் கிராம மக்கள், நேர்த்திக்கடனாக பிள்ளை உருவம், பாம்பு, கன்றுக்குட்டி உள்ளிட்ட பல்வேறு சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். 32 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறைப்படி நடந்த திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.