பதிவு செய்த நாள்
05
மே
2025
11:05
தொண்டாமுத்தூர்; பேரூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி நடந்தது.
கோவை மாவட்ட, தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்பிராஸ்) சார்பில், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி பேரூரில் உள்ள வைதீகாள் மண்டபத்தில் நேற்று நடந்தது. காயத்ரி கனபாடிகள் தலைமையிலான வைதீகர்கள், வைதீக நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தனர். இவ்விழாவில், 5 குழந்தைகளுக்கு, புதியதாக பூணூல் அணிவிக்கப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் தெய்வசிகாமணி மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். பல்வேறு கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். விழாவின் நிறைவில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.